மகளிர் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
பெரியகுளம்: பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில் பன்னாட்டு வரலாற்று கருத்தரங்கில் மாணவிகள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்பித்தனர்.ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில் வரலாற்று ஆய்வு மையம் மற்றும் இலங்கை ஜாப்னா பல்கலை வரலாற்று துறை இணைந்து பன்னாட்டு கருத்தரங்கம் நடத்தியது. கல்லூரி முதல்வர் இருதய கலைச்செல்வம் தலைமை வகித்தார். கல்லூரி செயலர் சாந்தமேரி ஜோஷிட்டா, பேராசிரியை ரெஜினாள் முன்னிலை வகித்தனர்.வரலாற்று துறை தலைவர் ஜெசிந்தா வில்வீனா வரவேற்றார். திருவாரூர் மத்திய பல்கலை பேராசிரியர் மாவலிராஜன், பழங்குடியினர் மக்களின் வாழ்வியல் முறை, அவர்களது உழைப்பு, சாதனை, முன்னேற்றம் குறித்தும், இலங்கை ஜாப்னா பல்கலை பேராசிரியை சாந்தினி பேசினர்.ஏற்பாடுகளை, பேராசிரியர்கள் ஜெனிபர், சுமேஷ், வில்லியம், சுதர்சன், பத்மஸ்ரீ மற்றும் வரலாற்று துறை பொறுப்பாளர்கள் செய்திருந்தனர். பேராசிரியை அனோஜா நன்றி கூறினார்.பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த 200 மாணவிகள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர். வரலாற்று ஆய்வுக்கட்டுரைகளை சமர்பித்த மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர்.