உள்ளூர் செய்திகள்

விடைத்தாள் திருத்தம் சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

புதுடில்லி: சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் நேற்று வெளியிட்ட அறிக்கை:சி.பி.எஸ்.இ., 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அது குறித்த ரகசிய தகவல்களை, சமூக வலைதளங்களில் பதிவிட்டு, கருத்துகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதாக வாரியத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இத்தகைய தகவல்களில் பெரும்பாலானவை உண்மைக்கு புறம்பானவை.வாரியத்தின் எச்சரிக்கையை மீறினால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்