இ.எஸ்., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
விழுப்புரம்: விழுப்புரம் இ.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 7வது பட்டமளிப்பு விழா நடந்தது.விழாவிற்கு, கல்லூரி முதல்வர் வேல்முருகன் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். இ.எஸ்.எஸ்.கே., கல்விக் குழும நிறுவன தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருந்தினர் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் குமார் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.விழாவில், இ.எஸ்.எஸ்.கே., கல்விக் குழும இயக்குனர் முரளிதரன், பேராசிரியை அகிலா மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.