உள்ளூர் செய்திகள்

சிட்டுக்குருவிகள் தினம் பள்ளியில் கொண்டாட்டம்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, மெட்டுவாவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சிட்டுக்குருவிகள் தின விழா கொண்டாடப்பட்டது.கிணத்துக்கடவு, மெட்டுவாவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சிட்டுக்குருவிகள் தின நிகழ்ச்சி, பள்ளி தலைமை ஆசிரியர் மயிலாத்தாள் தலைமையில் நடந்தது. அறிவியல் ஆசிரியர் சாவித்திரி தேவி, சிட்டுக்குருவிகள் வாழ்க்கை முறைகள், அழிவதற்கான காரணங்கள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.மேலும், பள்ளி மாணவர்களுக்கு தனியார் நிறுவனம் சார்பில் சிட்டுக்குருவிகள் தங்கும் செயற்கை கூண்டுகள் வழங்கப்பட்டது. இதை மாணவர்கள் வீடுகளில் வைத்து சிட்டுக்குருவிகளுக்கு உணவளிக்க அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்