அரசுப் பள்ளி ஆண்டு விழா
கடலாடி: கடலாடி அருகே எஸ்.வெள்ளாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.முன்னாள் ஊராட்சி தலைவர் திருமால் தலைமை வகித்தார். நீலமேகம் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் பொன்னுத்துரை வரவேற்றார். ஆசிரியர் பிரபு, கடலாடி அரசு கலைக் கல்லூரி விரிவுரையாளர் பொன்முத்து, தலைமை ஆசிரியர்கள் கலை முருகன், கிறிஸ்து ஞானவள்ளுவன், முனியசாமி, மாரியப்பன், லிங்கம், கனி, அந்தோணி உட்பட பலர் பங்கேற்றனர்.பள்ளி மாணவர் களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சிலம்பம் யோகா உள்ளிட்ட தனித்திறன் போட்டிகளும் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.