உள்ளூர் செய்திகள்

தடயவியல் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமான, 'தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகம்', 2026-27 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தடயவியல் அறிவியல், சைபர் பாதுகாப்பு, டிஜிட்டல் புலனாய்வு மற்றும் குற்றவியல் போன்ற துறைகளில் பிரத்யேக படிப்புகளை இப்பல்கலைக்கழகம் வழங்குகிறது.வளாகங்கள்: சென்னை, காந்திநகர், டெல்லி, கோவா, திரிபுரா, போபால், தார்வாடு, குவகாத்தி, புபனேஷ்வர், ராய்பூர், ஜெய்ப்பூர், நாக்பூர் மற்றும் வாரணாசிவழங்கப்படும் முக்கிய படிப்புகள்:பி.எஸ்சி., தடயவியல் அறிவியல் பி.எஸ்சி.,-பி.எஸ்சி., ஒருங்கிணைந்த தடயவியல் அறிவியல் பி.எஸ்சி., குற்றவியல் மற்றும் தடயவியல் அறிவியல்பி.டெக்.,-எம்.டெக்., கணினி அறிவியல் (சைபர் பாதுகாப்பு)பி.பி.ஏ.,-எம்.பி.ஏ., பி.பி.ஏ.,-எல்.எல்.பி., (ஹானர்ஸ்)பி.எஸ்சி.,-எல்.எல்.பி., (ஹானர்ஸ்)எம்.எஸ்சி., தடயவியல் அறிவியல் எம்.எஸ்சி., சைபர் பாதுகாப்புஎம்.எஸ்சி., டிஜிட்டல் தடயவியல் & தகவல் பாதுகாப்புஎம்.ஏ., குற்றவியல் எம்.பி.ஏ., உட்பட பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெறுகிறது.தகுதிகள்: படிப்பு மற்றும் துறைக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடுகிறது. விரிவான விபரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம். விண்ணப்பிக்கும் முறை: https://nfsu.ac.in/admission எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு: www.nfsu.ac.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்