உள்ளூர் செய்திகள்

பயிற்சி மையம் துவக்க விழா

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் சிறப்பு குழந்தைகளுக்கான 'உமே' நிறுவனத்தின் புதிய தொழில்நுட்ப கருவிகள் மூலம் பயிற்சி வழங்கும் மையம் திறப்பு விழா நடந்தது.கல்லூரித் தலைவர் உமா கண்ணன் தலைமை வகித்தார். முதல்வர் அசோக்குமார் வரவேற்றார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தலைமை கமிஷனர் கோவிந்தராஜ், ஜிப்மர் மருத்துவமனை டீன் சுனில் கே.நாராயணன் பேசினர்.சிறப்பு குழந்தைகளுக்கு உடற்பயிற்சி சிகிச்சை, தொழில் சிகிச்சை, இசையுடன் கூடிய சிகிச்சை அளிக்கும் 10 புதிய தொழில்நுட்ப தயாரிப்பு உபகரணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மார்லியன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வைத்தியநாதன் புதிய உபகரணங்கள் குறித்து விளக்கம் அளித்தார். உமே நிறுவனம் சார்பில் ரூ.2 லட்சம் தொழில் நுட்ப உபகரணங்கள் புதுச்சேரி சத்யா சிறப்பு பள்ளிக்கு வழங்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் டெய்சி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்