பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்
கோவை: அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6,838 மாணவர்கள் தேர்வெழுதினர். 6,595 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.நகராட்சி பள்ளிகளில் 549 மாணவர்கள் தேர்வெழுதினர். 516 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 93.99 சதவீதமாகும்.ஆதிதிராவிடர் பள்ளிகளில் 37 மாணவர்கள் தேர்வெழுதினர். 34 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம், 91.89 சதவீதம்.பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் 37 மாணவர்கள் தேர்வெழுதினர். அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.தனியார் பள்ளிகளில் 17,428 மாணவர்களில், 17,260 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம், 99.03 சதவீதம்.