உள்ளூர் செய்திகள்

எஸ்.ஆர்.எம்., இயக்குநருக்கு எப்.ஐ.சி.சி.ஐ.,யில் பதவி

சென்னை: எப்.ஐ.சி.சி.ஐ., தமிழ்நாடு கல்விக்குழுவின் இணை ஒருங்கிணைப்பாளராக, எஸ்.ஆர்.எம்., குழும இயக்குநர் ஹரிணி ரவி நியமிக்கப்பட்டு உள்ளார்.இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பான எப்.ஐ.சி.சி.ஐ.,யின் தமிழக பிரிவு சார்பில், 'உயர்கல்வி மாநாடு - 2026' நிகழ்வு நடந்தது.இந்த மாநாட்டில், எஸ்.ஆர்.எம்., குழும இயக்குநர் ஹரிணி ரவி, 2026 - 28ம் நிதியாண்டுக்கான எப்.ஐ.சி.சி.ஐ., தமிழ்நாடு கல்விக்குழுவின் இணை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டார்.அதற்கான அறிவிப்பை, இணை தலைவர் டாக்டர் அசோக் ஜி வர்கீஸ் வெளியிட்டார். மாநில கவுன்சிலின் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.கே.வேலு மற்றும் இணை தலைவர் பூபேஷ் நாகராஜன் ஆகியோர் ஹரிணி ரவிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.இது குறித்து, ஹரிணி ரவி கூறியதாவது:எப்.ஐ.சி.சி.ஐ., தமிழ்நாடு கல்விக்குழுவின் ஒரு பகுதியாக இருப்பது, எனக்கு பெருமை அளிக்கிறது. கல்வித்துறையில் ஒத்துழைப்பு, புதுமை மற்றும் தொழில் துறை அனுபவம், மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்புகளை உருவாக்கும் முக்கியமான காலகட்டம் இது என நம்புகிறேன்.குழுவுடன் இணைந்து பணியாற்றி, என்னால் இயன்ற பங்களிப்பை வழங்க ஆவலுடன் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.எப்.ஐ.சி.சி.ஐ., தமிழ்நாடு உயர்கல்வி மாநாடு நிகழ்வில், மாநில கவுன்சிலின் இணை தலைவர் டாக்டர் அசோக் ஜி.வர்கீசிடம் இருந்து, எஸ்.ஆர்.எம்., குழு இயக்குநரும், எப்.ஐ.சி.சி.ஐ., தமிழ்நாடு கல்விக்குழு இணை ஒருங்கிணைப்பாளருமான ஹரிணி ரவி நினைவுப் பரிசை பெற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்