மாத உதவித்தொகையுடன் இசைப்பள்ளியில் சேரலாம்
சேலம்: மாதம், 1,000 ரூபாய் உதவித்தொகையுடன், அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்து சேலம் கலெக்டர் இளம் பகவத் அறிக்கை: தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறை கட்டுப்பாட்டில், சேலம், தளவாய்ப்பட்டி திருப்பதி கவுண்டனூரில் அரசு இசைப்பள்ளி செயல்படுகிறது. அங்கு பாட்டு, தவில், நாதஸ்வரம், பரதநாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் கற்றுத்தரப்படுகின்றன. 13 முதல், 25 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர் சேரலாம். வார நாட்களில் காலை, 10:00 முதல் மாலை, 04:00 மணி வரை பயிற்சி வகுப்பு நடக்கும். 3 ஆண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும்.சேர்க்கை கட்டணம் ஆண்டுக்கு, 350 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். தவிர பயிற்சி காலத்தில் மாதந்தோறும், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். 2027 ஆண்டு மாணவர் சேர்க்கை நடக்கிறது. விண்ணப்பங்களை, 'தலைமையாசிரியர், அரசு இசைப்பள்ளி, தளவாய்ப்பட்டி, திருப்பதி கவுண்டனூர்' எனும் முகவரியில் நேரிலோ அல்லது சுய முகவரியிட்ட அஞ்சல் உறை இணைத்து, தபால் மூலம் அனுப்பியும் பெற்றுக் கொள்ளலாம். விபரங்களுக்கு, 0427 - 2906197; 96002 75911; 94435 39772 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.