மாணவர் சேர்க்கைக்கு விழிப்புணர்வு தீவிரம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, தொப்பம்பட்டியில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் வகையில், பெற்றோரிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி பள்ளி ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தலைமையாசிரியர் கணேசன் தலைமையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, பள்ளியின் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கப்பட்டது.மேலும், பள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள், உயர்கல்வி பயிலும் வகையில், 9ம் வகுப்பில் சேர்க்கப்பட்ட விபரங்களையும் கேட்டறிந்தனர். பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அய்யம்மாள், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மாரியம்மாள் மற்றும் பலர் பங்கேற்றனர்.