உள்ளூர் செய்திகள்

எம்.எஸ்.சி., மெடிக்கல் பயோடெக்னாலஜி அட்மிஷன்

வடவள்ளி: கோவை பாரதியார் பல்கலையின் உயிரித்தொழில்நுட்பத் துறையில், எம்.எஸ்.சி., மருத்துவ உயிரித்தொழில்நுட்ப முதுநிலைப் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறையின் நிதியுதவியுடன் நடத்தப்படும் 'எம்.எஸ்சி., மெடிக்கல் பயோடெக்னாலஜி' முதுகலை படிப்பிற்கு தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற இந்தப் படிப்பு, எம்.எஸ்சி., உயிரித்தொழில்நுட்பப் பட்டப்படிப்புக்கு இணையானதாகும்.கேட் பி நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவர். தகுதியானவர்களுக்கு அரசு உதவித்தொகையும் வழங்கப்படும்.சர்வதேச தரத்திலான பாடத்திட்டம், அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகள், உலகளாவிய அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் மற்றும் மற்றும் சிறந்த ஆராய்ச்சி சூழல் இத்துறையின் சிறப்பம்சங்களாகும். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இத்துறைக்கு 14 கோடி ரூபாய் ஆராய்ச்சி நிதியுதவி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. விருப்பமுள்ள மாணவர்கள் வரும் 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு, 0422-2428298 என்ற எண் அல்லது biotech.admissions @buc.edu.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்