கல்வி வணிகமயமாக்கலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கோவை: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று பல்வேறு மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அகில இந்திய மாணவர் கழகங்கள், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட ஒன்பது அமைப்புகள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்கவும், கல்வியை வணிகமயமாக்குவதாக கூறப்படும் நீட் தேர்வை ரத்து செய்து, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.