சமுதாய கல்லுாரிக்கு விண்ணப்பம் வரவேற்பு
புதுச்சேரி: லாஸ்பேட்டையில் புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லுாரி படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அதன்படி, www.pucc.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் வரும் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பி.காம்., பி.சி.ஏ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் தலா 50 சீட்டுகள், பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், உடற்கல்வி படிப்பில் தலா 40 சீட்டுகள், பி.எஸ்சி., பையோகெமிஸ்ட்ரி, பி.எஸ்சி., விஷூவல் கம்யூனிகேஷன், பி.பி.ஏ., பொது படிப்பில் தலா 30 இடங்கள் உள்ளன.கார்டியாக் லேப் டெக்னாலஜி, ரோடியோகிராபிக் அண்ட் இமேஜிங் டெக்னாலஜி, ஆபரேஷன் தியேட்டர், ரீனல் டயாலிசிஸ், ஆட்டோமெட்ரிக் டெக்னாலஜி உள்ளிட் பி.வோக்., பாராமெடிக்கல் படிப்புகளில் தலா 24 இடங்கள் உள்ளன. கார்டியாக் லேப் டெக்னாலஜி, ஆபரேஷன் தியேட்டர் உள்ளிட்ட முதுநிலை டிப்ளமோ படிப்புகளில் தலா 24 சீட்டுகள் உள்ளன. விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினருக்கு 200 ரூபாய், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 100 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி மகேஷ் தெரிவித்துள்ளார்.