உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் தின சிறப்பு பட்டிமன்றம்

சேலம்: சேலம் வைஸ்யா கல்லுாரி மகாலட்சுமி அரங்கத்தில் ஆசிரியர் தின சிறப்பு பட்டிமன்றம், பல்வேறு துறை சார்ந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது. கல்லுாரி சேர்மன் சிவானந்தம், பட்டிமன்ற நடுவர் சிங்காரவேலு, சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கினர். தொடர்ந்து சிங்காரவேலு தலைமையில் பட்டிமன்றம் நடந்தது.கோவில்பட்டி அன்னபாரதி செந்துார் நாகராஜ், கவிஞர் வினோத் மணிவண்ணன், விஜய் டிவி புகழ் திருச்சி அன்னலட்சுமி, திருப்பூர் பியூலா ஆகிய பேச்சாளர்கள் பங்கேற்றனர். கவிஞர் வினோத் மணிவண்ணன், சேலம் விக்கி, ஏற்பாடு செய்திருந்தனர்.விழாவில் நரசுஸ் வைஸ்யா சேர்மன் சிவானந்தம், பிரின்ட் லேப் உரிமையாளர் மனோகரன், வக்கீல் முருகன், செல்வமதி குரூப்ஸ் செந்தில்குமார், வி.எஸ்.பிரியாணி விஜி வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ., சக்திவேல் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்