உள்ளூர் செய்திகள்

வி.ஆர்.எஸ்., கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கம்

விழுப்புரம்: அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லுாரியில் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் 'இன்டிகா 2026' துவக்க விழாவும், கருத்தரங்கமும் நடந்தது.தாளாளர் சரவணன் தலைமை தாங்கினார். தகவல் தொழில் நுட்பத் துறை மாணவி ஷாணிஸ்ரீ வரவேற்றார். முதல்வர் அன்பழகன் முன்னிலை வகித்தார். கனடா, ஸ்பைஸ் டெக்னாலஜி நிறுவனம், சீனியர் சாப்ட்வேர் டெவலப்பர் முருகானந்தம், தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும், செயலிகள் நம்பகத்தன்மை பற்றியும் சிறப்புரையாற்றினார்.துணை முதல்வர், புல முதன்மையர், துறைத் தலைவர், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்