உள்ளூர் செய்திகள்

என்.ஜி.எம்., கல்லுாரியில் ஆசிரியர்களுக்கு பாராட்டு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில், 1982 - 85 பாரதியார் பல்கலையின் முதல் பேட்ஜ் மாணவர்களில், 60 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் சந்திப்பில், துணை தலைவர், பேராசிரியர்கள் கவுரவிக்க வேண்டும் என திட்டமிடப்பட்டது.அதன்படி, 1976 - 2023ல் படித்த மாணவர்களில் முக்கியமானவர்களை தேர்வு செய்து வரவழைத்து, பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், அனைத்து துறை பேராசிரியர்கள், கல்லுாரி முதல்வர், மேலாளர் மற்றும் தலைவர் டாக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.முன்னாள் பேராசிரியர்கள் பிரசாத்குமார்,94, பாலசுப்ரமணியம், 92, பொருளியல் பேராசிரியர் பத்மநாபன், ஆங்கில துறை பேராசிரியர் பாலகங்காதரன், அவரது மனைவி ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்