ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் ஆசிரியர்கள் கருத்தரங்கம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கலை, அறிவியல் கல்லுாரியில் ஆசிரியர்களுக்கு ஆராய்ச்சி முன்மொழிவு தயாரிப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தது.கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் அசோக் முன்னிலை வகித்தார். கல்லுாரியின் இன்ஸ்டிடியூட் இனோவேஷன் கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் லோரா வரவேற்றார். சென்னை மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லுாரியின் துணை முதல்வர் எம்.ஆர்.எப்., இனோவேஷன் பார்க்கின் சென்டர் பார் கம்ப்யூடேஷனல் இன்பார்மேடிக்ஸ் ரிசர்ச் - இனோவேஷன் ஒருங்கிணைப்பாளர் ஜெனெட் வெண்ணிலா ஆராய்ச்சி ஆலோசனையை வலுவான நிதி உதவி பெறக்கூடிய திட்ட முன்மொழிவாக மாற்றுவதற்கான நடைமுறைகளை விளக்கினார்.ஆராய்ச்சி பிரச்னையை தெளிவாக வரையறுக்க வேண்டும். இலக்கிய ஆய்வு மூலம் ஆராய்ச்சி இடைவெளியை கண்டறிந்து, பொருத்தமான ஆய்வு முறையை தேர்வு செய்ய வேண்டும். செயல்திட்டம், பட்ஜெட் தயாரித்தல், எதிர்பார்க்கப்படும் முடிவுகள், தாக்கத்தை தெளிவுபடுத்துதல் மற்றும் பயனுள்ள வழிகாட்டுதல்களின் முக்கியத்துவத்தை விரிவாக எடுத்துரைத்தார். அறிவியல் புல முதல்வர் சக்திவேல் நன்றி கூறினார்.