உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் இந்து மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.திருவள்ளூர், தேரடியில் அரசு நிதி உதவிபெறும் இந்து மேல்நிலைப் பள்ளியில், நாட்டு நலப்பணித் திட்ட முகாம் ஏழு நாட்கள் நடந்தது. முகாமில், 25 மாணவர்கள், பல்வேறு நாட்டு நலத்திட்ட பணியில் ஈடுபட்டனர்.நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று, மாணவர்களுக்கு போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் ஜெகதீஷ்குமார், விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.தொடர்ந்து, மாணவர்களுக்கு போதை பழக்கத்தில் ஈடுபடாமல் தவிர்ப்பது, ஊட்டச்சத்து உணவுகள் உட்கொள்வது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவர்கள் என, ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்