செவிலியர் வேலைக்கு விண்ணப்பம் பரிசீலனை
கோவை: மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் பணிக்கு பெறப்பட்ட 686 விண்ணப்பங்களில், 161 விண்ணப்பங்களில் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் விடுபட்டுள்ளன.விடுபட்ட ஆவணங்களின் விவரங்கள், coimbatore.nic.in, tndphpm.com இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களின் விடுபட்ட ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதிப்பட்டியல் இன்று வெளியிடப்படும். மேலும், விவரங்களுக்கு 0422-2220351, 87544 48477 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சுகாதாரத்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.