உள்ளூர் செய்திகள்

பள்ளியில் தீத்தடுப்பு செயல் விளக்கம்

பழநி: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பழநி தீயணைப்பு நிலையம் சார்பில் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை, பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.திட, திரவ, எரிவாயு பொருட்கள் தீப்பற்றினால் அணைக்கும் வழிமுறைகள், தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது, தீத்தடுப்பு உபகரணங்களை பயன்படுத்தும் முறைகள், நீர்நிலைகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. தீயணைப்பு துறை அலுவலர் காளிதாஸ் தலைமையிலான வீரர்கள் பயிற்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்