தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களுக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், திருச்செங்கோடு - சங்ககிரி ரோட்டில் உள்ள தனியார் கல்வி நிறுவன வளாகத்தில் நடத்தியது.சேலம் கலெக்டர் இளம் பகவத் தலைமை வகித்தார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், கைத்தறி துணி நுால் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய்பாலாஜி, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., லெனின், சங்ககிரி ஆர்.டி.ஓ., கேந்திரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சண்முகா கல்வி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் திருமூர்த்தி வரவேற்றார். தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை துவக்கி வைத்து, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது:இந்த வேலை வாய்ப்பு முகாமில், 260க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. உரிய நேர்முக தேர்வுகள் மூலமாக, 2,000 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.