பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடல்
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை சந்தைப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளி வளாகம் பகுதியில், முன்னாள் மாணவர்கள் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி பஞ்சாயத்து, லாலாப்பேட்டை சந்தைப்பேட்டை அருகே அரசு நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. பசுமையை மேம்படுத்தும் வகையில், பள்ளி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் சார்பில், மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் மரக்கன்றுகளை சுற்றி வேலி அமைக்கப்பட்டது. மரக்கன்றுகள் நடுவதால், பள்ளி வளாகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன், மாணவர்கள் கல்வி கற்பதற்கான உகந்த சூழல் ஏற்படுகிறது. ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.