பள்ளியில் கணினி அறிவியல் கண்காட்சி
ராஜபாளையம்: ராஜபாளையம் ஸ்ரீ ரமண அகாடமி மேல்நிலைப் பள்ளியில் கணினி அறிவியல் கண்காட்சி நடந்தது.பள்ளி தாளாளர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். மாணவி கார்த்திகா வரவேற்றார். சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை பேராசிரியர் சரவணன் பார்த்தசாரதி ரிப்பன் வெட்டி துவக்கி, எளிதில் கற்கலாம் ஏ.ஐ., எனும் தலைப்பில் பேசினார்.மாணவர்கள் 200க்கும் மேற்பட்ட திட்ட பணிகளை காட்சிப்படுத்தி இருந்தனர். மாணவர் தயா விஷ்ணு குமரன் புதிதாக உருவாக்கிய மருத்துவ செயலியை பள்ளி ஆலோசகர் டாக்டர் கு.கணேசன் துவக்கினார்.ஏற்பாடுகளை முதல்வர் சுதா தலைமையில் ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாக அதிகாரி செந்தாமரை கண்ணன் செய்தனர்.