வேளாண் தொழில்நுட்ப பணியிடத்துக்கான தேர்வு
திருப்பூர்: உதவி வேளாண் அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் உள்ளிட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடைபெற்றது.திருப்பூரில் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு மையங்களில் தேர்வு நடந்தது. மொத்தம் 942 பேர் தேர்வு எழுத ஹால்டிக்கெட் பெற்றிருந்தனர். இவர்களில் 550 பேர் மட்டுமே பங்கேற்று தேர்வு எழுதினர். 392 பேர் பங்கேற்கவில்லை. காலை 9:30 மணிக்கு தொடங்கிய தேர்வு, மதியம் 12:30 மணிக்கு நிறைவடைந்தது.