உள்ளூர் செய்திகள்

அரசு ஐ.டி.ஐ.,யில் பட்டமளிப்பு விழா

ஈரோடு: ஈரோடு அரசு ஐ.டி.ஐ.,யில் பயிற்சி முடித்த, 175 மாணவர், 75 மாணவியருக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.அரசு ஐ.டி.ஐ., முதல்வர் சீனிவாசன் வரவேற்றார். கலெக்டர் கந்தசாமி, பட்டங்களை வழங்கி பேசினார். தற்போது எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு அதிகரிப்பதால், அவற்றை பராமரிப்பது குறித்த தொழில்நுட்ப நல்லுனர் பயிற்சி, 71 அரசு ஐ.டி.ஐ.,களில் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். விழாவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கோபிநாத், பயிற்சி அலுவலர் புவனேஸ்வரி, பரமேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்