உள்ளூர் செய்திகள்

கால்நடை அறிவியலில் சான்றிதழ் பயிற்சிகள்!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 4 வகையான சான்றிதழ் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. கல்வித்தகுதி மற்றும் அது சம்பந்தமான பயிற்சிகளின் விவரம் பின்வருமாறு, 10 ஆம் வகுப்பு - விலங்கு நலம் பேணுதல்(புத்தகம்/இணையதள முறை) ஆங்கிலம் எழுத, படிக்க, பேச தெரிந்தவர்கள் - தீவனங்கள் தயாரிக்கும் பயிற்சி(குறுந்தகடு முறை) பி.வி.எஸ்.சி. பட்டப்படிப்பு - நோய் ஆய்வில் நவீன உத்திகள், அசைபோடும் பிராணிகளுக்கான சிகிச்சை முறைகள்(புத்தகம்/குறுந்தகடு முறை) மாடுகளில் மலட்டுத்தன்மையை போக்குவதற்கான மேலாண்மை பயிற்சி போன்றவை. ஒவ்வொரு பயிற்சியும் 6 மாதகாலம் நடைபெறுவதோடு, அனைத்தும் ஆங்கில வழியிலேயே இருக்கும். இவை சம்பந்தமான விண்ணப்பம் மற்றும் விவரங்களை www.tanuvas.ac.in என்ற இணையதளத்திலிருந்து பெறலாம். மேலும் அஞ்சல் வழியாகவும் விண்ணப்பங்களை பெறலாம். அனைத்தையும் பற்றிய விரிவான தகவல்களை பெற 044-25554375 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். விண்ணப்பங்கள் போய்சேர வேண்டிய கடைசி நாள் 31-01-2011.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்