உள்ளூர் செய்திகள்

வேலை மாறுவதில் பெண்கள் ஆர்வம்

உலகிலேயே இந்தியாவில்தான் அடிக்கடி வேலை மாறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று மா பாய் ரான்ஸ்டட் வேலைவாய்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. உலகில் அதிகளவில் பணி மாறுதல் நடைபெறும் நாடுகளான சீனா, மெக்சிகோ மற்றும் சிலி நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் அந்த விகிதம் மிக அதிகமாக இருப்பதாக இந்த அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவின் பெரிய நகரங்களோடு ஒப்பிடுகையில், தங்களின் வேலையை மாற்ற விரும்புவோர் தலைநகர் டெல்லியில்தான் அதிகம் உள்ளனர். அதிலும் ஆண்களைவிட பெண்கள்தான் குறிப்பாக அதிகம் உள்ளனர். இந்த புதிய ஆண்டில் உள்நாட்டு வேலை வாய்ப்பு சந்தை வளர்ச்சியடைந்து காணப்படுவதால், சமூகத்தின் பல பிரிவுகள், பல வயதினர், நாட்டின் பல நகரங்களை சேர்ந்தவர்கள் பணி மாறுதலில் ஆர்வம் காட்டுவதாக அந்த அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது. உலகளவில் பணி மாறுதல் சூழலானது, லக்சம்பர்க், ஜெர்மனி, ஹங்கேரி மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மிக குறைவாக உள்ளது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்