இந்திராகாந்தி முதுநிலை பட்ட ஸ்காலர்ஷிப்
தங்களின் பெற்றோருக்கு தாங்கள்தான் ஒரே ஒரு பெண்குழந்தை என்ற தகுதி உள்ள மாணவிகள், மத்திய மனிதவளத் துறை வழங்கும் இந்திராகாந்தி முதுநிலை பட்ட ஸ்காலர்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். தொழில்முறை சாராத படிப்புகளை முதுநிலை பட்டப்படிப்பாக படிப்பவர்களுக்கு மாதம் ரூ.2000 வீதம் மொத்தம் 20 மாதங்களுக்கு வழங்கப்படும் இந்த உதவித்தொகை திட்டம் 1200 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவிகள், தாங்கள் பெற்றோருக்கு ஒரே பெண்குழந்தைதான் என்பதற்கான அபிடவிட் மற்றும் ப்ரூப் ஆப் அட்மிஷனை சமர்ப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தில் பயன்பெறுவோர், தங்களின் படிப்பை பாதியிலேயே கைவிட விரும்பினால், அவர்கள் யு.ஜி.சி. -இடமிருந்து முன்அனுமதி பெற வேண்டும். முன் அனுமதியில்லாமல் படிப்பை பாதியிலேயே கைவிடுபவர்கள், முழுத்தொகையையும் திருப்பி செலுத்த வேண்டியிருக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் அந்த குறிப்பிட்ட மாணவிக்கு பொறுப்பேற்க வேண்டும். இது சம்பந்தமான முழுவிவரத்திற்கு www.ugc.ac.in என்ற வலைத்தளம் செல்லவும்.