உள்ளூர் செய்திகள்

விண்ணப்பங்களை பெறத் தொடங்கியது பிட்ஸ்

ராஜஸ்தான் மாநிலம் பிலானி என்ற நகரில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான பிர்லா கல்வி நிறுவனத்தில்(பிட்ஸ்) சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொறியியல், அறிவியல், தொழில்நுட்பம், மேலாண்மை, பார்மசி, மானுடவியல் போன்ற படிப்புகள் இங்கே நடத்தப்படுகின்றன. கடந்த 2010 -இல் 12 ம் வகுப்பு முடித்த அல்லது 2011 ம் ஆண்டில் 12 ம் வகுப்பு முடிக்க உள்ள, அதேசமயம் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பிட்சாட் ஆன்லைன் தேர்வுகள் மே 11 முதல் ஜூன் 10 வரை நடைபெறும். விண்ணப்பிக்கும் கடைசி தேதி ஜனவரி 31. மெரிட் அடிப்படையில் மாணவர் தேர்வு நடைபெறும். மத்திய மற்றும் மாநில வாரிய பள்ளிகளில் படித்து, 2011 ம் ஆண்டின் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்கள், தாங்கள் விரும்பும் படிப்பில் நேரடியாக சேர்த்துக்கொள்ளப் படுவார்கள். இதுபற்றி மேலும் விவரங்கள் அறிய &'பிட்ஸ்&' அதிகாரப்பூர்வ இணையத்தளம் சென்று காணவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்