எய்ம்ஸ் நுழைவுத்தேர்வு முடிவுகள் அறிவிப்பு
மருத்துவ அறிவியல்களுக்கான அனைத்திந்திய கல்வி நிறுவனம்(எய்ம்ஸ்), எம்.டி/எம்.எஸ்/டிப்ளமோ மற்றும் எம்.டி.எஸ். படிப்புகளுக்கு கடந்த மாதம்(ஜனவரி) 9 ம் தேதி நுழைவுத்தேர்வுகளை நடத்தியது. அந்த தேர்வுகளில் தேறிய மாணவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் இறுதி சேர்க்கையானது தகுதி சான்றுகள் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையிலேயே நடைபெறும். தேர்வு முடிவுகள் சம்பந்தமாக விரிவான விவரங்களை அறிந்துகொள்ள www.aiims.ac.in மற்றும் www.aiims.edu என்ற வலைதளங்களில் தேடவும்.