தமிழகம் வரும் அறிவியல் ரயில்
சென்னை: அறிவியல் கண்காட்சி சிறப்பு ரயில், ஜோலார்பேட்டை, மதுரை உட்பட தமிழகத்தில் நான்கு நகரங்களுக்கு வருகிறது. பதிமூன்று பெட்டிகளுடன் இயக்கப்படும் இக்கண்காட்சி ரயிலில், இந்தியாவின் அறிவியல் பாரம்பரியம், பருவநிலை மாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து தகவல்கள் இடம்பெற்றுள்ளன. வரும் 29ம் தேதி, தமிழகத்தில் ஜோலார்பேட்டைக்கு வரும் இக்கண்காட்சி ரயில், 4 மற்றும் 5ம் தேதிகளில் மதுரையிலும், அதன் பிறகு 6 மற்றும் 7ம் தேதிகளில் திருநெல்வேலி நிலையத்திலும் பொதுமக்களின் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்படுகிறது.