உள்ளூர் செய்திகள்

தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்

குஜிலியம்பாறை: பாளையம் அருகே தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து ஆறுதல் கூறினர்.பாளையம் எஸ்.புதுாரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மதன்பாபு 15. குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார்.இவரது தந்தை ஆறுமுகம் உடல் நலக்குறைவு காரணமாக தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று காலை 08:00 மணிக்கு இறந்தார்.இதை அறிந்த மதன்பாபு, குடும்பத்தினர் கதறி அழுதனர். நேற்று காலை மதன்பாபுவுக்கு, 10ம் வகுப்பு சமூக அறிவியல் பொதுத்தேர்வு நடைபெற்ற நிலையில் தேர்வை எழுத உறவினர்களிடம் கூறி உள்ளார். உறவினர்கள் மாணவனை பள்ளிக்கு அழைத்து சென்று தேர்வை எழுத வைத்தனர்.இதனிடையே ஆறுமுகத்தின் உடல் திருச்சியில் இருந்து எஸ்.புதுாருக்கு கொண்டு வரப்பட்டு நேற்று மாலை 04:00 மணிக்கு இறுதிச் சடங்கில் பங்கேற்றார். படிப்பின் முக்கியத்துவம் கருதி தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய மாணவனை பொதுமக்கள் பாராட்டி ஆறுதல் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்