டேக்வாண்டோ, சிலம்ப போட்டி 1,000 மாணவர்கள் பங்கேற்பு
சேலம்: தமிழக டேக்வாண்டோ சங்கம், சேலம் மாவட்ட டேக்வாண்டோ சங்கம் இணைந்து, சேலம், காந்தி மைதான உள் விளையாட்டு அரங்கில், மாவட்ட அளவில் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தின.போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், மேற்கு தொகுதி, த.வெ.க., எம்.எல்.ஏ., லட்சுமணன் தொடங்கி வைத்தனர். 10 வயதுக்கு கீழ் உள்ளோர், 14, 17, 19 வயது என, 4 பிரிவுகளில் போட்டி நடந்தது. 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், திறமையை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்தவர்கள், வரும், 26ல் கோவையில் நடக்க உள்ள மாநில போட்டிக்கு தகுதி பெறுவர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், மாநில பொதுச்செயலர் செல்வமணி செய்திருந்தனர்.அதே போல் சேலம் மாவட்ட சிலம்ப சங்கம் சார்பில், காந்தி மைதானத்தில், மாவட்ட அளவில் சிலம்ப போட்டிகளையும், அமைச்சர், எம்.எல்.ஏ., தொடங்கிவைத்தனர். 3 பிரிவுகளில், 650க்கும் மேற்பட்ட மாணவர்கள், திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன.