இலவச தொழில் பயிற்சி 12க்குள் விண்ணப்பம்
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் கோடைகால இலவச தொழில் பயிற்சி முகாம், வரும் 15ம் தேதி முதல் நடக்கிறது.பெரியநாயக்கன்பாளையத்தில் தேசிய மனித மேம்பாட்டு மையம் எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் செயல்படுகிறது. இங்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கான பல்வேறு இலவச தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.கோடைகால சுய தொழில் பயிற்சிகளான, அடிப்படை தையல் பயிற்சி, அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி, வீட்டு மின் சாதனம் பழுது பார்த்தல், ஆரி எம்ப்ராய்டரி பயிற்சிகள் ஒரு மாத காலமும், பெயிண்டிங் பயிற்சி ஒரு வார காலமும் வழங்கப்படுகிறது. பயிற்சிகள் சிறந்த வல்லுனர்களை கொண்டு வழங்கப்படும். செய்முறை பயிற்சிக்கு அதிக நேரம் ஒதுக்கப்படும். பயிற்சியுடன் வாழ்க்கை கல்வி சேர்த்து வழங்கப்படுகிறது.பயிற்சி நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ், சுயதொழில் தொடங்க ஆலோசனை வழங்கப்படும். பயிற்சியில், சுய தொழில் செய்ய விரும்புபவர்கள், பெண்கள், சுய உதவி குழுவினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் சேர்ந்து பயன்பெறலாம்.பயிற்சியில் சேர விரும்புவோர், படிப்பு சான்றிதழ் நகல், ஆதார் கார்டு நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், இம்மாதம், 12ம் தேதிக்குள் நேரில் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு, பயிற்சி ஒருங்கிணைப்பாளர், தேசிய மனித மேம்பாட்டு மையம், குப்பிச்சிபாளையம் ரோடு, பெரியநாயக்கன்பாளையம், கோவை, 20 மற்றும் மொபைல் எண், 81223 22381 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மையத்தின் இயக்குனர் சகாதேவன் தெரிவித்தார்.