ஐ.டி.ஐ., சேர்க்கை ஆக., 16 வரை நீட்டிப்பு
சிவகங்கை: சிவகங்கை அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் நேரடி சேர்க்கைக்கு ஆக., 16 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது, என கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, சிவகங்கை அருகே முத்துப்பட்டி அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எலக்ட்ரீசியன், பிட்டர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட், மெக்கானிக், எலக்ட்ரிக் வெகிகிள், அட்வான்ஸ்டு சி.என்.சி., மெஷின் டெக்னீசியன், இன்டஸ்ட்ரியல் ரொபோடிக்ஸ் மற்றும் டிஜிடல் மேனுபெக்ஜரிங் டெக்னீசியன் ஆகிய தொழில் பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. இதற்காக நேரடி மாணவர் சேர்க்கை ஆக., 16 வரை நடைபெறும்.