உள்ளூர் செய்திகள்

அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு ரூ1.71 லட்சம் கோடி!

6 வயதிலிருந்து 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்குவதைச் செயல்படுத்த வேண்டும் என்பதை அனைத்து மாநில கல்வி அமைச்சர்களும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர். எனினும், இதை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசு எவ்வளவு தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாநில அரசுகள் எவ்வளவு தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை. இதுகுறித்து முடிவெடுக்கப்பட்டதும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். சர்வ சிக்ஷ அபியான் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தொடக்க நிலையில் மத்திய அரசு 60 சதவீதமும் மாநில அரசுகள் 40 சதவீதமும் நிதி அளிக்கிறது. 2012ம் ஆண்டில் மத்திய, மாநில அரசுகள் இந்த செலவுக்கான நிதியில் தலா 50 சதவீதம் அளவுக்கு அளிக்க வேண்டும் என்பதையும் கபில் சிபல் சுட்டிக்காட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்