உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு: 18ம் தேதி சட்டசபை முற்றுகை

புதுச்சேரி: உயர்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு கேட்டு வரும் 18ம் தேதி சட்டசபையை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என, அ.தி.மு.க., மாநில செயலர் அன்பழகன் அறிவித்துள்ளார்.அ.தி.மு.க., மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உப்பளம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. அவைத் தலைவர் அன்பானந்தம், பேரவை செயலர் பாஸ்கர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மாநில செயலர் அன்பழகன் பேசியதாவது:வரும் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க, தலைமையில் அமையும் கூட்டணி புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் உயர் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க கவர்னர், முதல்வர், அமைச்சரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், இந்தாண்டு மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஓரிரு இடங்கள் மட்டுமே கிடைக்கும் நிலை உள்ளது. இதனைக் கண்டித்தும், விரைவில் உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி வரும் 18ம் தேதி காலை 9 மணிக்கு மாதா கோவில் அருகில் சட்டசபை முற்றுகை போராட்டம் நடைபெறும்.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் மாநில இணை செயலர் கணேசன், துணை தலைவர் ராஜாராமன், மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், நகர செயலர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்