உள்ளூர் செய்திகள்

தேர்வில் தேர்ச்சி பெறாத 1,800 மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி

விருதுநகர்: "மாவட்டத்தில் 10ம்வகுப்பு, பிளஸ் 2 காலாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,800 மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது என, முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார். அவர் கூறியதாவது: மாவட்ட பள்ளிகளின் 10ம்வகுப்பு, பிளஸ் 2 காலாண்டுத்தேர்வின் தேர்ச்சி 73 சதவீதம் ஆகும். இதை இரண்டாம் இடைத்தேர்வில் 90 சதவீதமாகவும், அரையாண்டுத் தேர்வில் 100 சதவீதமாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். காலாண்டுத் தேர்வில் இவ்வகுப்புகளில் பாடவாரியாக தேர்ச்சி பெறாத மாணவர்களின் மேல் சிறப்பு கவனம் செலுத்தப்படும். அதன்படி, விருதுநகர், ஸ்ரீவி., அருப்புக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டங்களில் தலா 600 மாணவர்கள் என 1,800 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நடிகர் தாமு மூலம் தேர்ச்சி பெறுவது குறித்து புத்தாக்க பயிற்சியளிக்கப்படுகிறது. அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் சிறப்பு வகுப்பு நடத்தப்படும். விருதுநகரில் நவ.,3, அருப்புக்கோட்டையில் நவ.,5, ஸ்ரீவி.,யில் நவ.,6ல் இந்நிகழ்ச்சி நடக்கிறது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் மூலம் 10ம் வகுப்பு, பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியளிக்கப்படுகிறது. பள்ளிகளில் ரெட்கிராஸ் அமைப்பின் சிறந்த செயல்பாட்டிற்காக விருதுநகர்மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான விருது, மதுரை காமராஜர் பல்கலையில் நடக்கும் ஜெனிவா ஒப்பந்த நாள் விழாவில் வழங்கப்படுகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்