முதுநிலை மருத்துவ படிப்பிற்கு 2ம் கட்ட கலந்தாய்வு: சீட் ஒதுக்கீடு
புதுச்சேரி: முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு சென்டாக் 2ம் கட்ட கலந்தாய்வு நடத்தி சீட் ஒதுக்கீடு செய்துள்ளது.நீட் மதிப்பெண் அடிப்படையில் அரசு, நிர்வாக மற்றும் சிறுபான்மையினர் இடங்கள் என்ற அடிப்படையில் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீடு விபரம் www.centacpuducherry.in என்ற இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.சீட் கிடைத்த மாணவர்கள் தங்களுடைய டேஷ்போர்டு லாகின் மூலம் உள்ளே நுழைந்து கல்லுாரியின் சீட் ஒதுக்கப்பட்டதற்கான சேர்க்கை கடிதத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம். சீட் கிடைத்த கல்லுாரியில் வரும் 20ம் தேதி மாலை 5 மணிக்குள் சேர வேண்டும்.புதுச்சேரி தவிர்த்த பிற பிராந்திய மாணவர்கள் நேரில் அல்லது ஆன்லைன் மூலமாக இடம் கிடைத்த கல்லுாரியில் தகவல் தெரிவித்து சேரலாம்.புதுப்பிக்கப்பட்ட குடியிருப்பு, ஜாதி சான்றிதழ் இதுவரை சமர்பிக்காதவர்கள் வரும் 20ம் மாலை 3 மணிக்குள் ஆவணங்களை சமர்பித்த பின் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.இத்தகவலை சென்டாக் வெளியிட்டுள்ளது.