உள்ளூர் செய்திகள்

நான்காயிரம் போலீஸ் வேலைக்கு 2 லட்சம் பேர் விண்ணப்பம்

திண்டுக்கல்: தமிழகத்தில், அக்டோபர் 25ல் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 910 பேர் இரண்டாம் நிலை போலீசாருக்கான எழுத்து தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கு கடிதம் அனுப்பும் பணி துவக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 2009ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை ஆண், பெண் போலீஸ் பணிக்கான தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. காலியிடங்கள் 4,000. இதில், பெண்களுக்கு 1,200 பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. தேர்வு எழுதுபவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பும் பணி அந்தந்த மாவட்ட எஸ்.பி., அலுவலகங்களில் துவக்கப்பட்டுள்ளது. 32 மையங்களில், ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 600 ஆண்களும், 30,310 பெண்களுமாக மொத்தம் 1,91,910 பேர் தேர்வு எழுத உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்