வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.0 கருத்தரங்கு
கோவை: ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் கே.பி.ஆர்., கல்லுாரி சார்பில் 'வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.0' என்ற தலைப்பில், பெண் தொழில்முனைவோர் கருத்தரங்கு, வரும் 8ம் தேதி நடத்தப்படுகிறது.ஈஷா மண் காப்போம் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீமுகா நிருபர்களிடம் கூறியதாவது, “இயற்கை வேளாண்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த, மண் காப்போம் இயக்கத்தை, ஈஷா நடத்துகிறது.இதன் ஒரு பகுதியாக, வீட்டிலிருந்தே பெண்கள் வருமானம் ஈட்டும் வகையில், அரசூர், கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வரும் 8ம் தேதி கருத்தரங்கு நடக்கிறது. பல்வேறு துறைகளில் சாதித்த பெண் தொழில்முனைவோர் பங்கேற்கின்றனர். வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டும் வணிக யுக்திகள் எடுத்துரைக்கப்படும்.வேளாண் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், நவீன பேக்கேஜிங் இயந்திரங்கள், வேளாண் கருவிகள் விற்பனை மற்றும் கண்காட்சி நடக்கிறது. பங்கேற்க முன்பதிவு அவசியம்.” இவ்வாறு தெரிவித்தார்.கூடுதல் தகவலுக்கு 83000 93777, 94425 90077.