உள்ளூர் செய்திகள்

வேளாண் துணை இயக்குனர்கள் 23 பேருக்கு பதவி உயர்வு

சென்னை: வேளாண் துறையில் காலியாக இருந்த, 23 மாவட்ட இணை இயக்குனர் பணியிடங்கள், பதவி உயர்வு வாயிலாக நேற்று ஒரே நாளில் நிரப்பப்பட்டன.வேளாண் துறையில் செயலர், கமிஷனருக்கு அடுத்து, மாவட்ட இணை இயக்குனர் பதவிகள் முக்கியமானவை. விவசாயிகளுக்கு தேவையான உதவிகள், சாகுபடி பரப்பை அதிகரிக்கும் பணிகள், இணை இயக்குனர்கள் வாயிலாகவே நடக்க வேண்டும்.ஆனால், பல்வேறு மாவட்டங்களில் இணை இயக்குனர் பதவிகள் ஓராண்டாக காலியாகவே இருந்தன. துணை இயக்குனர்கள் கூடுதலாக இப்பணிகளை கவனித்து வந்தனர். இதனால், வேளாண் பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.இந்த பிரச்னை, வேளாண் துறை செயலராக சமீபத்தில் பொறுப்பேற்ற அபூர்வா கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து, 23 துணை இயக்குனர்களுக்கு தற்காலிக பதவி உயர்வு வழங்கி, காலியாக இருந்த மாவட்ட இணை இயக்குனர் பதவிகளில் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும், மூன்று இணை இயக்குனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்