திருவள்ளுவர் தின விழா 24வது ஆண்டாக களம்
கோவை: கணபதி தமிழ் சங்கம் பசுமை காப்பகம் சார்பில், 24வது ஆண்டாக திருவள்ளுவர் தின விழா நடந்தது.அமைப்பு சார்பில், வாரம் ஒரு முறை என, 1250வது திருக்குறள் வகுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, திருக்குறள் ஒப்புவித்தல், எழுதுதல், ஓவியம், கதை, கவிதை ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்ற தலைப்பில், கல்லுாரிகளில் கருத்தரங்கு நடத்தப்பட்டது.ஆயிரம் திருக்குறளை ஒப்புவிப்போருக்கு, திருவள்ளுவர் சிலை வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறது. ஒரு கட்டமாக, திருவள்ளுவர் தின விழாவில், அமைப்பின் நிறுவன தலைவர் நித்யானந்தா பாரதி வரவேற்றார்.'திருவள்ளுவரும் வள்ளலாரும்' என்ற தலைப்பில், வள்ளலார் அமைப்பின் பொருளாளர் சதீஷ், 'நடுகல் வழிபாடு' குறித்து, ஐ.டி., துறையில் பணிபுரியும் குகன் ஆகியோர் பேசினர்.கொங்குநாடு தொல்லியல் வரலாற்று ஆய்வு மைய தலைவர் மேகா சக்திபாரதி, 'திருக்குறள் படிப்போம்' என்ற உறுதிமொழியை வாசிக்க, மற்றவர்கள் ஏற்றனர். அமைப்பின் பொருளாளர் மூர்த்தி நன்றி கூறினார்.