அரசு கலை கல்லுாரியில் 25ல் கலை போட்டி
ஊட்டி: ஊட்டி அரசு கலைக் கல்லுாரியில் வரும், 25ல் கலை போட்டிகள் நடத்தப்படுகிறது.ஊட்டி அரசு கலை கல்லுாரி வளாகத்தில் வரும், 25ம் தேதி காலை, 10:00 மணி முதல் கலை போட்டிகள் நடக்க உள்ளது. போட்டியில் குழுவாக பங்கு பெற அனுமதி இல்லை. தனி நபராக அதிகபட்சம், 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்படும்.குரலிசை, நாதஸ்வரம், வயலின், வீணை புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டு வாத்தியம், மாண்டலின், கிட்டார், சாக்ச போன், கிளாரினெட் போன்ற போட்டிகளில், ஐந்து வர்ணங்கள் மற்றும் கற்பனை இசை (மனோதர்ம இசை) நிகழ்த்தும் இளைஞர்கள் பங்கு பெறலாம்.பரதநாட்டியத்தில், மூன்று வர்ணங்கள் மற்றும் பாடல்கள் நிகழ்த்துபவர்கள் போட்டியில் பங்கேற்கலாம். கிராமிய நடனத்தில், கரகாட்டம், கணியான் கூத்து, காவடியாட்டம், புரவியாட்டம், தப்பாட்டம், மலை மக்கள் பாரம்பரிய நடனங்கள் அனுமதிக்கப்படும்.ஓவிய போட்டியில் பங்கேற்பவர்களுக்கு, ஓவிய தாள்கள் மட்டுமே வழங்கப்படும். அக்ரிலிக் வண்ணம் மற்றும் நீர் வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிகபட்சம், 3 மணி நேரம் வரைய அனுமதிக்கப்படுவர்மாவட்ட போட்டிகளில் வெற்றி பெறும் இளைஞர்களுக்கு, முதல் பரிசு, 6,000 ரூபாய், இரண்டாவது பரிசு, 4,500 ரூபாய், மூன்றாவது பரிசு, 3,500 ரூபாய் வழங்கப்படும்.முதல் பரிசு பெறுபவர்கள், மாநில போட்டிக்கு தகுதி பெறுவர். மேலும் விபரங்களுக்கு, கலை பண்பாட்டு துறையின் கோவை மண்டல அலுவலகத்தின் 0422-2610290; 63801-97789 மற்றும் 89253-57377 எண்களை தொடர்பு கொள்ளலாம்.