உள்ளூர் செய்திகள்

கால்நடை மருத்துவ படிப்பு: 3ல் விண்ணப்ப பதிவு துவக்கம்

சென்னை: பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு, நாளை மறுதினம் முதல் விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ், ஏழு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 660 பி.வி.எஸ்சி., - ஏ.ஹெச்., என்ற கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகள் உள்ளன. இவற்றில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 63 இடங்கள் போக, 597 இடங்கள் மாநில ஒதுக்கீட்டில் உள்ளன.அதேபோல், உணவு தொழில்நுட்ப மற்றும் பால்வள தொழில்நுட்பம் என்ற, பி.டெக்., படிப்புக்கு, 100 இடங்கள் உள்ளன. இவற்றில், ஒன்பது இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு செல்கின்றன.இந்த படிப்புகளுக்கான 2024 - 25ம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கு, https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில், ஜூன் 3 காலை 10:00 மணி முதல் 21ம் தேதி மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பதால், மேலும் விபரங்களை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்லாம்.இந்த மாணவர் சேர்க்கையில், 7.5 சதவீத ஒதுக்கீட்டின்படி, அரசு பள்ளி மாணவர்களுக்கு 53 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்