உள்ளூர் செய்திகள்

தேசிய கல்வி கொள்கை 3 ஆண்டு நிறைவு

சென்னை: தேசிய கல்வி கொள்கை திட்டம் மூன்றாண்டுகளை நிறைவு செய்துள்ளது.தேசிய கல்வி கொள்கை 2020 (என்இபி) இன் மூன்றாண்டு நிறைவையொட்டி திறன் மேம்பாட்டு பயிற்சிகளை குறித்து தொழில் முனைவோருக்கான மண்டல இயக்குநகரகம் வெளியிட்டுள்ளது. முழுமையான வளர்ச்சியை மேம்படுத்தவும், நிலையான திறன்களை ஊக்குவிக்கவும், மாணவர்களின் திறன்களை வளர்க்கவும் ஆர்டிஎஸ்டி திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. தொழில் துறை-கல்வித்துறை ஒத்துழைப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி ஆகியவற்றின் மூலம் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.பொதுக்கல்வியில் தொழிற்கல்வியை ஒருங்கிணைத்தல், முழுமையான மற்றும் வேலை வாய்ப்பு திறன்களில் கவனம் செலுத்துதல், மாநில மொழிகளில் திறமை, தொழில்நுட்பம் சார்ந்த கற்றல், தொழில்-கல்வித்துறை ஒத்துழைப்பு, மறுதிறன் மற்றும் மேம்பாடு, உள்ளடக்கிய மற்றும் நிலையான திறன்கள், தொழில்முனைவுக் கல்வி, தொடர்ச்சியான ஆசிரியர் பயிற்சி மற்றும் தொழில்முறை மேம்பாடு, ஆர்டிஎஸ்டி பற்றிய தகவல்களை வழங்குகிறது. மேலும் இத்திட்டங்கள் மூலம் மத்திய பல்கலைகளுடன் இணைந்து மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும், தொழில் முனைவோர் பயிற்சிகளையும் ஆர்டிஎஸ்டி வழங்கி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்