உலகப் பட்டியலில் சூப்பர் 30 ஆனந்தகுமார்...
பீகார் மாநிலம் பாட்னாவில் ஏழை எளிய மாணவர்களுக்கு ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வுப் பயிற்சியை இலவசமாக நடத்தி வரும் சூப்பர் 30 பயிற்சி நிறுவன இயக்கனர் ஆனந்தகுமார் பற்றி இன்று இளைஞர்கள் பலரும் அறிவர். ஐரோப்பாவின் புகழ் பெற்ற போகஸ் இதழில் உலகில் சிறப்புத் திறன் பெற்றிருப்பவர்களை வழிநடத்திச் செல்லக்கூடிய திறன் பெற்றவர்கள் பட்டியலில் இவரது பெயரை அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே புகழ் பெற்ற டைம் இதழ் இவரை ஆசியாவின் குறிப்பிடத்தக்க மனிதர் என்று குறிப்பிட்டு புகழ் சூடியது. டிஸ்கவரி சேனல் அவரைப் பற்றிய சிறப்பு 30 நிமிட செய்தித் தொகுப்பை தயாரித்து ஒளிபரப்பியது. பிரிட்டன் நாட்டின் திரைப்படம் ஒன்றும் அவரைப் பற்றிய தகவல் களைக் கொண்ட காட்சிகளை அத் திரைப்படத்தில் இடம் பெறச் செய்தது. கடந்த 8 ஆண்டுகளில் 212 மாணவர்கள் ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில் வெற்றி பெறச் செய்துள்ள அவரது முயற்சிகள் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து வந்துள்ளன. நுழைவுத் தேர்வு ஒன்றின் மூலமாக மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் ஆனந்த குமாரின் சூப்பர் 30 பயிற்சி நிறுவனத்தில் தினசரி 16 மணி நேர சிறப்புப் பயிற்சி தரப்படுகிறது.