தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., தமிழ்நாடு பிராமணர் சங்கம் புகழாரம்
மதுரை:''தமிழ் வளர்ச்சிக்கும், உழைப்பாளர்களின் உயர்வுக்கும் பாடுபட்டவர், 'தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர்,'' என, தமிழ்நாடு பிராமணர் சங்க தென்மண்டல தலைவர் இல.அமுதன் பேசினார்.மதுரையில், 'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின், 117வது பிறந்த நாளை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கும் விழா, மதுரை நகர் கிளைத்தலைவர் கணபதி வரதசுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.தென்மண்டல தலைவர் அமுதன் பேசுகையில், ''தினமலர் நிறுவனர் தேசத்தையும், மொழியையும் இரு கண்களாக நேசித்தவர். கன்னியாகுமரியை தமிழகத்துடன் இணைக்க முக்கிய பங்கு வகித்தவர்.''எல்லா சமுதாயத்தினரும் வாழ்வில் உயர உதவியிருக்கிறார். அவரின் தலைமுறையினர் தினமலர் நாளிதழை தர்மத்தின் வழி புத்தாக்கத்துடன் நடத்தி வருகின்றனர்,'' என்றார்.முன்னாள் வங்கி மேலாளர் சுந்தர்ராஜன் புத்தாடைகளை வழங்கினார்.மாவட்ட தலைவர் பக்தவத் சலம், மாவட்ட பொதுச் செய லர் ராமகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் கோதண்டரா மன், நகர் கிளை பொருளாளர் சங்கரநாராயணன், பொதுச்செயலர் கோவிந்த ராஜன், மாவட்ட இளைஞரணி செயலர் மீனாட்சி சுந்தரம் கலந்து கொண்டனர்.