தேசிய கல்வி விருது: ஹாட்ரிக் சாதனை
சோழவந்தான்: கல்வி குழும தலைவர் செந்தில்குமார் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய கல்வி விருது பெற்று சாதனை படைத்து உள்ளார். பெங்களூருவில் நடந்த 'எஜுகேஷன் டுடே இந்தியா மெரிட் அவார்ட்ஸ்' விழாவில் இவ்விருதைப் பெற்று உள்ளார்.கல்வித்துறையில் புதுமை, நீண்ட நாள் கற்றல் பார்வை, மாணவர் மையப்படுத்தப்பட்ட கல்வி முன்னேற்றம் ஆகிய வற்றில் சிறந்த பங்களிப்பிற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாநில அளவில் 'ஒருங்கிணைந்த கற்றலில்' முதல் தரவரிசை எண்ணைப் பெற்றுள்ளது.ஒழுங்கமைக்கப்பட்ட கற்றல் சூழல்கள், பலகோண கற்றல் அணுகு முறைகள், கல்வி தொழில் நுட்ப ஒருங்கிணைப்பில் சிறந்த செயல்பாட்டால் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.மேலும் கல்வி இன்டர் கான்டினென்டல் பள்ளி 'எதிர்கால பாதுகாப்புக் கற்றல்' பிரிவில் தேசிய அளவிலான பாராட்டை பெற்றுள்ளது. எதிர்கால தொழில்நுட்பங்கள், புதுமை சார்ந்த கற்றல் நடைமுறைகளை முன்னெடுத்தல், மாணவர்களை உலகளாவிய போட்டிகளுக்கு தயாராகும் முயற்சிகள் இந்த அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளது.